வர்தா புயலால் பெங்களூரிலும் நல்ல மழை.. குளிர் வாட்டுகிறது
பெங்களூர்: வர்தா புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி பெங்களூர் ஓரளவுக்கு மழையை பெற்றுள்ளது. மைசூர் உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவை பெற்றுள்ளன.
வர்தா புயல் நேற்று முன்தினம் சென்னையில் கரையை கடந்தது. தரை மார்க்கமாக அது அரபிக் கடலை நோக்கி பயணித்தது. எனவே நேற்று முன்தினம் மாலை முதல் பெங்களூர், மைசூர், ராம்நகர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

பெங்களூரில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு 5.5 செ.மீ என வானிலை இலாகா கூறுகிறது. பெங்களூர் சுற்று வட்டாரத்தில் பொம்மனஹள்ளி மண்டலத்திற்குள் வரும், கொட்டிகெரே பகுதியில்தான் அதிகபட்சமாக 7.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ராம்நகர் மாவட்டத்தின் கக்கலஹள்ளி மாநிலத்திலேயே அதிக அளவு மழைப்பொழிவை பெற்றுள்ளது. குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த மழை ஓரளவுக்கு நிம்மதி தந்துள்ள போதிலும், ஏரிகளில் நீர் மட்டம் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரை பொறுத்தளவில் இன்று வானம் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 80 பாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே இருக்கும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications