பீகாரில் பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் சிறை!
பாட்னா: பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொந்தரவு செய்பவர்களை சிறையில் அடையுங்கள் என, பீகார் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலத்தில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொல்லை தரும் போக்கு அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அம்மாநில உயர் போலீஸ் அதிகாரி அரவிந்த பாண்டே, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு, மொபைல்போன் மூலமாக தொல்லை கொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது, பல சட்டவிரோத செயல்களுக்கு காரணமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்களை அடையாளம் கண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறைத் தண்டனை வாங்கித் தர வேண்டும். ஓரிரு முறை, 'மிஸ்டு கால்' கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது இல்லை. கவனக்குறைவு காரணமாக கூட இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம். இவ்வாறு, அவர், அதில் அறிவுறுத்தியுள்ளார்.
போனுக்கெல்லாம், போரா, பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது என்று இளசுகள் புலம்புகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications