குறுக்கே வரும் பாஜக.. காஷ்மீரில் நூலிழையில் மிஸ்ஸாகும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி - Exit Poll Result
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிக இடங்களில் வென்றாலும் கூட பாஜகவால் நூலிழையில் மெஜாரிட்டியை இழக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக செயல்பட்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமான பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்தனியே களமிறங்கி உள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் தேர்தலை பொறுத்தவரை மும்முனை போட்டி என்பது நிலவி வருகிறது. 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம்தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் Dainik Bhaskar சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி 35 முதல் 40 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பாஜக தனித்தே 20 முதல் 25 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மாறாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 4 முதல் 7 இடங்களிலும், மற்றவர்கள் 12 முதல் 16 தொகுதிகளிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பலிக்கும் பட்சத்தில் உண்மையில் மற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சியினர் கிங் மேக்கராக மாறுவார்கள். இவர்களின் ஆதரவில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications