For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை சுண்டி இழுக்கும் பெங்களூர் லால்பாக் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் உள்ள லால்பாக் பூங்காவில் கண்கவர் மலர்கண்காட்சி நடந்து வருகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு பெங்களூரில் உள்ள லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தற்போது நடந்து வருகிறது.

தோட்டக்கலை துறையின் 50வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

மலர்கள்

மலர்கள்

லால்பாக் பூங்கா மலர் கண்காட்சியில் உள்ள வண்ண வண்ண மலர்களை பார்த்து மகிழ இன்றே அங்கு செல்லுங்கள்.

கோபுரம்

கோபுரம்

மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள 18 அடி மலர் கோபுரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பூண்டு

பூண்டு

மலர்களைக் கொண்டு செய்யப்பட்ட பெரிய பூண்டு ஒன்று கண்ணாடி அணிந்து ஸ்டைலாக காட்சி அளிக்கிறது.

காளான்

காளான்

மலர்களால் ஆன வண்ண வண்ண காளான்கள் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

கேரட்

கேரட்

மலர்களால் ஆன கேரட் பெரிய கண்களுடன் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருக்கிறது.

டெடி

டெடி

குழந்தைகள், பெண்களுக்கு மிகவும் பிடித்த டெடி பேர் பிரமாண்டமாக காட்சி தருகிறது.

மாம்பழம்

மாம்பழம்

மலர்க் குவியல்களால் ஆன மன மனக்கும் மாம்பழம் ஒய்யாரமாக காட்சி அளிக்கிறது.

English summary
If you are still making your plans for the weekend, we suggest that you head out to the Lalbagh Botanical Gardens, where the Annual Republic Day flower show is already attracting thousands of visitors. The flower show is on till Jan 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X