ஒட்டகத்து மேல பாருங்க.. 8 கோடியாமே.. அடேங்கப்பா.. மொத்த பேரையும் மலைக்க வைத்த ராஜஸ்தான் "பாசமலர்"
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தங்கையின் திருமணத்திற்காக ரூ.8 கோடியில் அண்ணன்கள் வரதட்சணை கொடுத்துள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் திங்சரா கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் பன்வாரி தேவி. இவருக்கு அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா என 4 அண்ணன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், தேவிக்கு கடந்த சில மாதங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்திருக்கின்றனர். ஆனால் எந்த மாப்பிள்ளையும் செட் ஆகவில்லை. இறுதியாக ரைதானு கிராமத்தை சேர்ந்த இளைஞரை குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
இதனையடுத்து திருமணத்திற்கான பேச்சுகள் தொடங்கியுள்ளன. மாப்பிள்ளையின் வீட்டிலும் தேவியை பிடித்துவிட அனைவரும் திருமணத்திற்கு தயாராகியுள்ளனர். முதற்கட்டமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது மாப்பிள்ளை வீடு தரப்பிலிருந்து வரதட்சணை எவ்வளவு கொடுக்கப்படும் என்று கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேவியின் அண்ணன்கள் எதையும் உறுதியாக சொல்லவில்லை. அப்போது லேசான சலசலப்பு எழுந்திருக்கிறது. சிலர் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

ராஜஸ்தான்
ஆனாலும், தேவிக்கு மாப்பிள்ளையை பிடித்திருப்பதால் திருமணத்தை நடத்தி முடிப்பதில் அண்ணன்கள் நால்வரும் விடாபிடியாக இருந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பல விநோதமான கலாச்சாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இம்மாநிலத்தில் பெண்களுக்கு என பெரியதாக எந்த உரிமையும் கிடையாது. ஒரு சில மாவட்டங்களில் பெண்கள் வெளிப்படையாக விற்கப்படுகிறார்கள். அதாவது கிராமத்தின் பணக்காரர்களிடமிருந்து சிலர் கடன் வாங்குவார்கள். இந்த கடன் கொடுக்கப்படும்போதே சில நிபந்தனைகள் விதிக்கப்படும்.

கடன்
குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் கட்டப்படவில்லையெனில் கடன் பெற்றவர் தன்னுடைய மகளை கொடுத்துவிட வேண்டும். இப்படி ஏராளமான பெற்றோர் தங்கள் மகளை இழந்துள்ளனர். இவ்வாறு வாங்கப்பட்ட இளம்பெண்கள் கொஞ்ச நாட்கள் பணம் கொடுக்கப்பட்ட பணக்காரரின் வீட்டில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருப்பார்கள். பின்னர் டெல்லி போன்ற மாநிலங்களுக்கு இப்பெண்கள் கடத்தப்படுவார்கள். இந்த விஷயம் சமீபத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது.

வரதட்சனை
இப்படிப்பட்ட மாநிலத்தில்தான் தங்கள் தங்கைக்கு அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா எனும் 4 அண்ணன்களும் சிறப்பாக திருமணத்தை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி திருமணம் 26ம் தேதி நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு வரதட்சணை கொடுப்பதற்காக தேவியின் கிராமமான திங்சாராவிலிருந்து ரைதானு கிராமத்திற்கு மாட்டு வண்டி மற்றும் ஒட்டகங்களில் சீதனங்கள் புறப்பட்டன. இதில் ரூ 2.21 கோடி ரொக்கம், ரூ.4 கோடி மதிப்பில் நிலத்திற்காக பத்திரம், ரூ.71 லட்சம் மதிப்பில் 1 கி.கிக்கும் அதிகமான தங்க நகைகள், ரூ.9.8 லட்சம் மதிப்பில் 14 கி.கி வெள்ளி, ரூ.7 லட்சம் மதிப்பிலான டிராக்டர், இது தவிர வீட்டு உபயோக பொருட்கள் லட்சக்கணக்கான ரூபாயில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சட்டம்
இதனை சுற்று வட்டார கிராமத்தினர் வேடிக்கை பார்த்திருக்கின்றனர். ஒருபுறம் வாங்கி கடனை அடைக்க முடியாமல் பெற்ற மகளையே விற்கும் இதே மாநிலத்தில்தான் கோடி கணக்கில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி தவறு என்றாலும் கூட இந்த வழிமுறை தங்கள் வீட்டின் பொருளாதார வலிமையை உணர்ந்த இரு வீட்டார்கள் சார்பில் கொடுக்கவும், வாங்கவும் ஒப்புக்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications