ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக வெல்ல வாய்ப்பில்லை: வாக்களிப்பியல் நிபுணர் சந்தீப் சாஸ்திரி
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் சட்டசபை தேர்தலில் அதிமுக வெல்ல வாய்ப்பு இல்லை என்று வாக்களிப்பியல் நிபுணர் (psephologist) சந்தீப் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் தேமுதிக என்ன முடிவு எடுக்கும்? திமுக- தேமுதிக கூட்டணி அமைந்தால் அதிமுக என்ன வியூகம் வகுக்கும் என பரபரப்பான யூகங்கள், விவாதங்களாக இருக்கிறது.

இந்த தேர்தல் களம் எப்படி இருக்கும்? யார் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு? என்பது குறித்து வாக்களிப்பியல் நிபுணர் சந்தீப் சாஸ்திரி அளித்த பேட்டி:
திமுக- காங்கிரஸ் கூட்டணி தேமுதிக வர வேண்டும் என விரும்புகிறது; பாஜகவும் தேமுதிகவுடன் 3வது அணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் 3-வது அணி உருவானால் அது ஜெயலலிதாவுக்குத்தான் சாதகமாக இருக்கும்.
கேள்வி: திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால்....?
பதில்: தேமுதிகவுடனான கூட்டணி திமுகவுக்கு வலுவான நிலையை கொடுக்கும். அதே நேரத்தில் அதிமுக கடுமையாக போராட வேண்டியிருக்கும். எப்படியாவது தேமுதிகவை கொண்டுவர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது திமுக.
கேள்வி: தமிழகத்தில் பாஜகவுக்கான செல்வாக்கு பற்றி?
பதில்: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு பிரதான கட்சியாக இல்லை. லோக்சபா தேர்தலில் பாஜக நல்ல கூட்டணியை அமைத்தது. அது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். தற்போது நடைபெற இருப்பது சட்டசபை தேர்தல்... இதில் பாஜகவை தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக பார்க்கவில்லை.
கேள்வி: ஜெ. விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால் அது தேர்தலில் எப்படி எதிரொலிக்கும்?
பதில்: மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவரது நிலைமை கடினம்தான்... அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. நீண்டகாலத்துக்கு முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தவும் முடியாது.
அப்படி அவர் முதல்வர் வேட்பாளராக இல்லையெனில் அதிமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவும் மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அனுதாபம் ஏற்பட்டு அது அதிமுகவுக்கு கை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications