2009இல் சுயேச்சை வேட்பாளர்! இன்று ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்வர்! யார் இவர்?
ஒடிசா: சுயேச்சை வேட்பாளராக தனது தேர்தல் அரசியலை தொடங்கிய பெண் ஒருவர், இன்று அம்மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
ஒடிசாவின் பாஜக முதன்முதலாக இன்று ஆட்சி அமைக்க உள்ளது. மாநிலத்தில் முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்க உள்ளார்.

இவருடன் சேர்ந்து துணை முதல்வர்களாக கேவி சிங் தியோவும், பிரவதி பரிதாவும் பதவியேற்பார்கள் என்று என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடந்தது. மொத்தம் உள்ள 147 சீட்டுகளில் பாஜக 78 இடங்களில் வெற்றிபெற்றது. கடந்த 24 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பிஜு ஜனதா தளம் வெறும் 51 இடங்களில்தான் வெற்றி பெற்றது.
இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 14 இடங்களில் வென்றுள்ளது. சிபிஐ (எம்) மற்றும் ஐஎன்டி தலா ஒரு இடங்களை வென்றுள்ளன.
இந்நிலையில் 90 ஆண்டுகால வரலாறு கொண்ட ஒடிசா சட்டசபையில் முதன்முறையாக பெண் ஒருவர் துணை முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். அந்த வாய்ப்பு பிரவதி பரிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜ்நாத் சிங் அவரது எக்ஸ் பதிவில், "ஒடிசா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் ஒரு இளம் மற்றும் ஆற்றல்மிக்க கட்சி காரியகர்த்தா. அவர் ஒடிசாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்று மாநிலத்தை செழிப்பான முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார். அவருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் பிரவதி பரிதா யார்?: பிஜேபி தலைவர் பிரவதி பரிதா நிமாபாரா பகுதியைச் சேர்ந்தவர். தொழில்முறை வழக்கறிஞரான அவர், புவனேஸ்வரின் உட்கல் பல்கலைக்கழகத்தில் தனது எல்எல்பி படிப்பை முடித்தார். அதன் பின்னர் தன்னை ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.
பரிதா பல ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்து வந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் முதலில் ஒடிசாவில் பாஜகவின் மகளிர் பிரிவுத் தலைவராகப் பணியாற்றினார். இவரது ஷியாம் சுந்தர் நாயக்.
நிமாபாரா தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பிரவதி பரிதா. 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பிஜேடி வேட்பாளர் சமீர் ரஞ்சன் தாஷால் இவர் தோற்கடிக்கப்பட்டார்.
இந்த நிமாபாரா தொகுதியில் இவர் போட்டியிட்ட நான்கு முறை இதுவரைப் போட்டியிட்டுள்ளார். இந்த முறை இவர் 95430 வாக்குகளைப் பெற்று பிஜு ஜனதா தளம் வேட்பாளரை 4588 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்தத் தொகுதியில் பாஜக கடைசியாக 2004இல் வென்றது. அதன்பின்னர் 2004 முதல் 2019 வரையாக தேர்தல்களில் பிஜு ஜனதா தள வேட்பாளர்கள்தான் வென்று வந்தனர். 15 ஆண்டுகள் கழித்து இங்கே பாஜக மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.
2009இல் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக இவர் 6,820 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதன்பின்னர் பாஜக வேட்பாளராக அடுத்தடுத்து களம் கண்டார்.
சுயேச்சை வேட்பாளராக தனது தேர்தல் அரசியலை தொடங்கிய பிரவதி பரிதா, இன்று பல கட்ட அரசியல் அனுபவங்களைப் பெற்று மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வராக பதவியேற்று தனது முத்திரையை பதித்துள்ளார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications