For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை திடீர் ரத்து!

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரவாத தாக்குதல் காரணம்... இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

    டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்திய எல்லையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீர் போலீசார் வரிசையாக கடத்தி கொலை செய்யப்படுகிறார்கள்.

    கடந்த மாதம் பாகிஸ்தான் அதிபராக இம்ரான் கான் பதவியேற்றார். ராணுவத்தின் ஆதரவு இருக்கும் இவர் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இம்ரான் கான் பிரதமர் மோடியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

    முடிவு செய்யப்பட்டது

    முடிவு செய்யப்பட்டது

    இந்த நிலையில் அடுத்த வாரம் நடக்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி சந்திப்பு நடந்த இருப்பதாக முடிவானது. வரும் 25-26 தேதிகளில் இந்த கூட்டம் நடக்கிறது. அதில் ஒருநாள் சந்திப்பு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    ரத்து செய்தது

    ரத்து செய்தது

    இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடம் கிடையாது என்று கூறி, இந்திய அரசு இந்த சந்திப்பை ரத்து செய்துள்ளது.

    மூன்று பேர் கொலை

    மூன்று பேர் கொலை

    இரண்டு நாட்கள் முன் நரேந்திர குமார் என்ற இந்திய பாதுகாப்பு படை வீரர் காணாமல் போனார். அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்து அறுக்கப்பட்டு மரணம் அடைந்து இருந்தார். இன்று காலை காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் மூன்று போலீஸ் அதிகாரிகள் கடத்தி செல்லப்பட்டனர். இதனால் தற்போது அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பதட்டமான சூழ்நிலை

    பதட்டமான சூழ்நிலை

    இதனால் தற்போது எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே காஷ்மீர் போலீசார் எல்லோரும் ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையென்றால் கடத்தி சென்று கொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    English summary
    India calls off the meeting between External Affairs Minister & Pakistani Foreign Minister that was scheduled to take place in New York later this month on the sidelines of #UNGA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X