ராஜஸ்தானில் 123 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு... இந்தியாவில் பதிவான மிக அதிக வெப்பம்!
டெல்லி: வட மேற்கு இந்தியாவில் உள்ள பலோடி என்ற நகரில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுதான் இந்தியாவில் இதுவரை பதிவான வெப்ப அளவிலேயே அதிக அளவாகும். இதனால் இந்த நகரம் புதிய சாதனையைப் படைத்த பெருமையைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ளது இந்த பலோடி நகரம். இது ஒரு நகராட்சியாகும். வட மேற்கு இந்தியாவில் ஏப்ரல் மே மாதங்களில் அதிக அளவில் வெயில் அடிக்கும். இதுபோலத்தான் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக உள்ளது.

ஆனால் நேற்று பிற்பகல் இங்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் வெப்பம் பதிவானது. அதாவது 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் இங்கு பதிவாகியுள்ளது. இதை பாரன்ஹீட்டில் சொல்வதானால் 123.8 டிகிரி பாரன்ஹீட்டாகும். இந்த வெப்ப நிலையானது புதிய சரித்திரமாக மாறியுள்ளது.
இதுவரை நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலை 50.6 டிகிரிதான். அதுவும் கூட 1886ம் ஆண்டு பதிவானதாகும். அதன் பிறகு இந்த அளவுக்கு அதிக அளவிலான வெப்ப நிலை இந்தியாவில் எங்குமே பதிவானதில்லை.
இந்தியாவில் கடந்த பல வாரங்களால் பல பகுதிகளில் வெயில் கடுமையாக உள்ளது. நூற்றுக்கணக்கானோர் வெயிலுக்குப் பலியாகியுள்ளனர். வட இந்தியா மற்றும் நேபாளத்திலும் வெயில் கடுமையாக உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கடும் வெயிலுக்கு 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications