டிரம்புக்கு ஊமைக்குத்து.. இந்திய பொருளாதாரம் செத்துப்போய்ட்டா? அமெரிக்காவுக்கு மோடி தந்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: நம் நாட்டின் பொருளாதாரம் செத்துப்போய்விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆணவமாக பேசினார். இது நம் நாட்டினரை கோபப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப்பிற்கு மறைமுகமாக பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுத்தார். நம் நாட்டின் பொருளாதாம் செத்துப்போகவில்லை. விரைவில் உலகில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உள்ளது என்று வாரணாசி பொதுக்கூட்டத்தில் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார். வரி விதிப்பை தடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் நம் நாடு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் வரும் 7 ம் தேதி முதல் 25 சதவீத வரியை நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் டிரம்ப்.

india-on-way-to-3rd-biggest-economy-says-pm-modi-after-donald-trumps-dead-economy-remark

இந்த வரி விதிப்புக்கு முக்கிய காரணம் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் வர்த்தகம் மற்றும் நட்பு தான் என்று டிரம்ப் வெளிப்படையாக அறிவித்துள்ளார். நம் நாடு தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுப்பதாக டிரம்ப் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ரஷ்யாவிடம் ஆயுதம், எண்ணெய், கியாஸ் உள்ளிட்டவற்றை தொடர்ந்து நம் நாடு வாங்கி வருவது டிரம்பை கோபமாக்கிய நிலையில் நமக்கு வரி போட்டுள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் கவலை இல்லை. இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் செத்து விட்டது. அவர்கள் இன்னும் இணைந்து அந்த பொருளாதாரத்தை நாசமாக்கட்டும் என்று வன்மத்தை கக்கினார்.

இந்நிலையில் தான் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரம் செத்துப்போய்விட்டது என்று பேசிய டொனால்ட் டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலடி கொடுத்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அனைத்து நாடுகளும் தங்களின் தனிப்பட்ட நலன்களில் கவனம் செலுத்துகின்றன. இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறப்போகிறது.

அதனால் தான் இந்தியா தனது பொருளாதார நலன்களை பொறுத்தவரை மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். மத்திய அரசு நாட்டின் நலனுக்காக முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்படவர்கள் நம் நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறவதை பார்க்க விரும்புகின்றனர் இதனால் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ‛சுதேசி' பொருட்களுக்கான தீர்மானத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்ற முடிவுக்கு வர வேண்டும். உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் செத்துப்போய்விட்டது என்று கூறி டிரம்புக்கு மறைமுகமாக மோடி பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் செத்துப்போகவில்லை. விரைவில் உலகில் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறப்போகிறது என்பதை டிரம்பிற்கு, மோடி நினைவுப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+