போர் மேகம் சூழ்ந்த இந்தியா பாக் எல்லை.. வெறிச்சோடிய வானம்.. ஒரு விமானமும் பறக்கவில்லை
இந்தியா-பாகிஸ்தான் விமான சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஜம்மு: இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் விமானமே பறக்காமல் அந்தப் பிராந்தியமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
நேற்று பதிலடி தந்ததற்கு ஆவேசப்பட்ட பாகிஸ்தான், இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையை காட்ட ஆரம்பித்தது. இதனால் இந்திய விமானப் படையினர் ஊடுருவிய அந்நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.

விமான சேவை
இதன் காரணமாக எல்லையில் தொடர்ந்து பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. மேலும் போர் மூளும் சூழலும் ஏற்பட்டு உள்ளதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் வேலையாக இந்திய பாகிஸ்தான் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டது. மறு மார்க்கத்திலும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டன
குறிப்பாக ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா, குலுமணாலி, பிதாரோகார், பதான்கோட், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆகிய 8 இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.

அச்சம்
இரு நாடுகளும் இப்படி முட்டிக் கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானங்களும் இந்த இரு நாட்டு பக்கம் வர தயங்குவதாகவும், அச்சப்படுவதாகவும் தெரிகிறது. எனவே எல்லைப் பகுதி வான்வெளி போக்குவரத்து இல்லாமல் அமைதியாக உள்ளது.
|
வெறிச்சோடியது
இந்தப் பக்கமாக விமானங்கள் பறக்காமல் வேறு மார்க்கத்தில் திசை திருப்பிவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வானமே வெறிச்சோடி உள்ளது. இதை ஒருவர் ரேடார் படத்துடன் டிவீட் போட்டுள்ளார். பிற்பகல் மணி போல வானம் இப்படித்தான் இருந்தது என்று பதிவிட்டுள்ளார். அதேசமயம், எல்லைப் பகுதியைச் சுற்றிலும் விமானப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல விமானங்கள் சென்று வருகின்றன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications