இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார் மனாபி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் தனது பணியை துவக்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மனாபி. இவர் கடந்த மாதம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தேர்வானார். அதனைத் தொடர்ந்து நேற்று மனாபி கல்லூரி கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் தான். புதிய முதல்வராக பதவியேற்ற மனாபிக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் இனிப்புகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மனாபி கூறுகையில், ‘கல்லூரி சர்வீஸ் கமிஷன் நடத்திய நேர்காணலில் தேர்ச்சி பெற்று நான் எனது திறமையினால் இந்த நிலையை எட்டியுள்ளேன். இந்த நியமனம் நான் ஆணா, பெண்ணா, அல்லது 3-ம் பாலினமா என்பது பற்றியது அல்ல.
சமூகத்தை விட மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து எனக்கு இப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது' என்றார்.
துணைவேந்தர் ரத்தன்லால் ஹாங்லூ, மனாபியை வரவேற்று கூறும்போது, "அவர் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இவரது நியமனம் பெரிய உத்வேகத்தை அளிக்கும், சட்டத்துக்கு முன் பாலின வேறுபாடின்றி அனைவரும் சமம் என்பதை இவரது நியமனம் நிறுவியுள்ளது" எனத் தெரிவித்தார்.
நைஹதியில் மரபான வங்காள நடுத்தர குடும்பத்தில் பிறந்த மனோபி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் ஆவார். இவருக்கு திபாஷிஷ் என்ற வளர்ப்பு மகன் ஒருவரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications