“ஷாக்”.. மிக முக்கிய தகவலை வெளியிட்ட சிபிஐ.. ஒடிசா ரயில் விபத்தில் 288 உயிர்கள் போக இதான் காரணமா?
ஒடிசா: பாலசோரில் நிகழ்ந்த கோர ரயில் விபத்துக்கான பிரதான காரணம் என்ன என்று விசாரித்து வந்த சிபிஐ, தற்போது அதனை கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறது.
ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரயில் விபத்து
உலகையே உலுக்கி இருக்கிறது. இருப்பினும் அது குறித்த சர்ச்சைகளும், பரபரப்புகள், செய்திகளும் ஓய்ந்தபாடில்லை. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஸ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்ததது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பேர் பயணித்து இருக்கின்றனர். மற்றொரு பயணிகள் ரயிலான யஷ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. சரக்கு ரயில் ஸ்டேஷனரி பொருட்களை சுமந்து சென்று உள்ளது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஐ தொட்டது. இந்த ரயில் விபத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கிறார்கள். சிலர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் சூழலில், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த சிலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்தவுடன் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர், போலீசாருடன் இணைந்து ஒடிசா மக்களும் களத்தில் இறங்கி உதவிகளை மேற்கொண்டனர். இந்த கோர ரயில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சிபிஐ குழு ரயில் விபத்து நேர்ந்த இடத்திலும், ரயில் நிலையத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலைய கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ரயில் நிலைய அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் ஒரு வார விசாரணையின் முடிவில் சிபிஐ ரயில் விபத்துக்கான காரணத்தை வெளியிட்டு உள்ளது. சிபிஐ வெளியிட்ட தகவலின்படி இண்டர்லாக்கிங் எனப்படும் இரட்டை பூட்டுதல் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனையே ரயில் விபத்துக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் இண்டர்லாக்கிங் அமைப்பு அணைக்கப்பட்டு இருக்கிறது. இண்டர்லாக்கிங் அமைப்பை அணைத்து வைத்து விட்டு ரயில் நிலையத்தின் அதிகாரி பச்சை சிக்னல் கொடுத்ததாலேயே ரயில் விபத்து ஏற்பட்டதாக சிபிஐ முதற்கட்ட தகவலை வெளியிட்டு உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications