மீண்டும் எஸ்எம்எஸ் வசதி, 5 மாதங்களுக்குப் பின் காஷ்மீர் அரசு மருத்துவமனைகளில் இண்டர்நெட்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் இணைய சேவைகள் ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று அதிகாலை 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதேபோல் காஷ்மீரில் உள்ள அனைத்து மொபைல் போன்களின் எஸ்எம்எஸ் வசதி டிசம்பர் 31 நள்ளிரவு முதல் மீண்டும் வேலை செய்ய தொடங்கி உள்ளது. இந்த தகவலை ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்சால், "டிசம்பர் 31 நள்ளிரவு முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இணைய இணைப்பை மீண்டும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். அதன்படி இணையசேவை மீண்டும் வந்தள்ளது.
370 வது பிரிவை ரத்து செய்வதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவித்த அன்று முதல் ஜம்மு காஷ்மீரில் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டன.
100 நாட்களுக்கு பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிய மொபைல் மற்றும இணைய சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. கடந்த வாரம், லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவைகள் 145 நாட்களுக்கு திரும்ப வந்தது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் இணைய சேவைகள் ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ளது. அனைத்து மொபைல் போன்களின் எஸ்எம்எஸ் சேவைகளும் மீண்டும் வந்துள்ளன. ஜம்மு காஷ்மீரின் மாவட்டங்கள், முக்கிய சுற்றுலா இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் இணைய சேவைக்காக 900 டச் பாயிண்டுகள் மற்றும் சிறப்பு கவுண்டர்கள் செயல்படுகின்றன, சுமார் 6 லட்சம் பேர் இந்த டச் பாயிண்ட்களைப் பயன்படுத்தி வருவதாக ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பிரிப்பெய்டு இணைய சேவைகள் இன்னும்முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications