சேப்பாக்கத்தில் போட்டிகளை நடத்துவோம்.. மாத்த மாட்டோம்.. ராஜீவ் சுக்லா பிடிவாதம்!
சென்னையில் திட்டமிட்ட தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: சென்னையில் திட்டமிட்ட தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழ் அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னையில் போட்டிகள் நடத்தினால் தங்களின் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் குறிப்பிட்ட தேதிகளில் திட்டமிட்டபடி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியை அரசியலாக்க வேண்டாம் என்றும் ராஜிவ் சுக்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் 2000 போலீசார் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
