ஸ்மிருதி சர்ச்சை: டிரையல் ரூமுக்கு வெளியில்தான் கேமரா இருந்ததாக வக்கீல் தகவல்!
கோவா: கோவா துணிக்கடையில் உடைமாற்றும் அறைக்கு வெளியேதான் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அந்தத் துணிக்கடையின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, நேற்று கோவா வந்தபோது ஒரு துணிக்கடைக்குச் சென்றார். அப்போது உடைமாற்றும் அறைக்குச் சென்ற அவர், அங்கு ஒரு துளையில் தொங்கவிடப்பட்டிருந்த ரகசிய கேமராவைக் கண்டறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது கணவர் ஜுபின் இரானியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, இரானி அளித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மைக்கேல் லோபோவும், போலீஸாரும் அங்கு கேமரா இருந்ததை உறுதி செய்தனர். கடையில் மேலாளர் அறையில் இருந்த கணினியுடன் அந்த கேமரா இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கேமராவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் ஆராய்ந்தபோது அதில் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து இரானியுடன், மற்றொரு பெண்ணும் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்தக் கடைக்கு போலீஸார் சீல் வைத்து, கடை ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனிடையே துணிக்கடையில் உடைமாற்றும் அறைக்கு வெளியேதான் கேமரா பொறுத்தப்பட்டிருந்ததாக அந்த துணிக்கடையின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications