தேர்தலில் யூசுப் பதான் வெல்வாரா? காங்கிரஸை வீழ்த்த மம்தா மாஸ்டர் பிளான்! ஆதிர் ரஞ்சனுக்கு விழும் அடி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: வரும் லோக்சபா தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையாக உள்ள நிலையில் அங்கு லோக்சபா காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்பியை எதிர்க்க உள்ளார். இந்நிலையில் தான் யூசுப் பதான் அங்கு வெல்வாரா? அவரை ஏன் இந்த தொகுதியில் மம்தா பானர்ஜி களமிறக்கி உள்ளார் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. மேலும் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‛இந்தியா' என்ற பெயரையே மம்தா பானர்ஜி பரிந்துரைத்ததும், அதுவே கூட்டணிக்கு இறுதியாக சூட்டப்பட்டது.

Is Yusuf Pathan will win Baharampur Constituency Why Mamata Banerjee choosed him and fielded against Adhir Ranjan chowdhury

இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதாவது ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து தான் போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்யப்பபோவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

தற்போதைய சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசுக்கு 22 எம்பிக்கள், பாஜகவுக்கு 18 எம்பிக்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. அந்த மாநிலத்தில் படிப்படியாக காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு இன்னும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் ஓட்டுகள் பிரியும். இதன்மூலம் பாஜக ஆதாயமடையும் எனவும் சொல்லப்படுகிறது. இது திரணாமுல் காங்கிரஸ் கட்சிக்கம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. தகுதி நீக்கம் செய்ய எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிக்காக இவர் விளையாடினார். அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கிய இவர் சுழற்பந்தும் வீசுவார். இந்நிலையில் தான் யூசுப் பதான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவாரா?, அவரை ஏன் மம்தா பானர்ஜி இந்த தொகுதியில் களமிறக்கினார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

மேற்கு வங்க மாநிலம் முர்சிடாபாத் மாவட்டத்தில் பஹராம்பூர் நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் 2019 வரை மொத்தம் 17 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. இதில் ஒருமுறை கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வென்றது இல்லை. இங்கு 11 முறை புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. 1952 முதல் 1998 வரை நடந்த 12 நாடாளுமன்ற தேர்தல்களில் ஒருமுறை மட்டுமே (1984 தேர்தல்) காங்கிரஸ் வென்றது. பிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியிடம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தனர்.

அதன்பிறகு கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாறியது. 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தொடர்ந்து 5வது முறையாக அவர் வென்று எம்பியாக உள்ளார். மேலும் லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவராகவும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செயல்பட்டு வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தான் காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் களமிறங்க உள்ளார். இன்னும் இந்த தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் களமிறங்குவது உறுதி என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள பஹராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து ஒருமுறை கூட வெல்லாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் யூசுப் பதான் போட்டியிடுகிறார். இவரை மம்தா பானர்ஜியே நேரடியாக களமிறக்கி உள்ளார். ஏனென்றால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும், மம்தா பானர்ஜிக்கும் துளியும் ஆகாது. மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி உடைய மம்தா மீதான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கடும் விமர்சனம் தான் முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்த சரியான நபர் என யூசுப் பதானை அவர் அங்கு களமிறக்கி உள்ளார்.

ஏனென்றால் பஹராம்பூர் தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் தான் உள்ளனர். அதாவது பஹராம்பூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 52 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அதாவது சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். பொதுவாக இஸ்லாமியர்களின் ஓட்டுகள் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தான் கிடைக்கும். இதனால் தான் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். ஆனால் கிரிக்கெட் வீரராக புகழ்பெற்ற யூசுப் பதான் தற்போது களமிறக்கப்பட்டுள்ளதன் மூலம் இஸ்லாமியர்கள் ஓட்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

ஏனென்றால் யூசுப் பதானும் ஒரு இஸ்லாமியர். மேலும் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டு சதவீதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன்மூலம் பிரபலமான யூசுப் பதானை இறக்கி பஹராம்பூர் நாடாளுமன்ற தொகுதியை ஈஸியாக கைப்பற்ற மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். அதோடு தன்னை தொடர்ந்து விமர்சித்து வரும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தி வீட்டில் உட்கார வைக்கலாம் என மம்தா பானர்ஜி கணக்கிட்டு யூசுப் பதானை களத்தில் இறக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+