"எனக்கு சம்பளமே தரல.." நடுரோட்டில் படுத்து தூங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் ஊழியர்! ஷாக் சம்பவம்
புனே: டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தான் 12000 பேரை வேலையை விட்டுத் தூக்கப்போவதாக அறிவித்திருந்தது. இது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கிடையே இப்போது டிசிஎஸ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் புனே டிசிஎஸ் ஆபீஸ் வாசலிலேயே நடைபாதையில் படுத்துத் தூங்குகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் இளைஞர்கள் பலரும் ஐடி துறையில் தான் வேலை செய்கிறார்கள். ஆனால், இப்போது கடந்த சில காலமாக ஐடி துறை அவ்வளவு ஒன்றும் சிறப்பானதாக இல்லை. ஐடி துறையில் பல சிக்கல்கள் இருந்து வருகிறது. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சமீபத்தில் 12000 பேரை வேலையை விட்டுத் தூக்கப்போவதாக அறிவித்து சர்ச்சை கிளப்பியிருந்தது.

நடுரோட்டில் தூங்கிய ஐடி ஊழியர்
இதற்கிடையே இப்போது டிசிஎஸ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் புனே அலுவலகம் முன்பு ஊழியர் ஒருவர் நடைபாதையில் தூங்கும் போட்டோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சம்பளப் பாக்கி காரணமாகவே இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாகச் சொல்லி அந்த நபர் கைப்பட லெட்டர் எழுதி அருகே வைத்திருப்பதும் அந்த போட்டோவில் தெளிவாகத் தெரிகிறது.
'பீயிங் புனேகர் ஆபிஷியல்' என்ற சமூக வலைத்தளப் பக்கத்தில் முதலில் இந்த போட்டோ பகிரப்பட்டது. சௌரப் மோர் என்ற ஊழியர் தனது சம்பள நிலுவைத் தொகையை நிறுவனம் வழங்காததால் நடைபாதையில் தூங்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது
கடந்த ஜூலை 29ம் தேதி மோர் பணிக்குத் திரும்பியதாகவும் இருப்பினும் அப்போது தனது ஐடி மற்றும் அல்டிமேட்டிக்ஸ் போன்ற அணுகல் ரத்து செய்யப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜூலை 31ஆம் தேதிக்குள் மோரின் நிலுவைத் தொகை அனைத்தும் செலுத்தப்படும் என்று ஹெச்ஆர் உறுதி அளித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சொன்னபடி தனது நிலுவைத் தொகை எதுவும் வரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், "என்னிடம் பணம் இல்லை என்றும், நிலுவைத் தொகையைத் தரவில்லை என்றால் டிசிஎஸ் அலுவலகம் முன்பு நடைபாதையிலேயே தூங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹெச்ஆர் தரப்பிடம் தெரிவித்தேன். ஹெச்ஆர் அதற்குப் பதிலளிக்கவில்லை., மவுனமாக இருந்தார். எனவே, ஜூலை 29 முதல் டிசிஎஸ் அலுவலகம் முன்பு நடைபாதையில் வசித்து வருகிறேன்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள்
இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாது. கொஞ்ச நேரத்திலேயே பலரும் இந்த போட்டோவை பகிர்ந்தனர். மேலும், நெட்டிசன்கள் பலரும் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகளைக் கூறினர். குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் மவுனமாக இருப்பது சரியான போக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
டிசிஎஸ் விளக்கம்
இது பெரிய பேசுபொருள் ஆனதைத் தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனம் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. மோர் திடீரென பல நாட்கள் அலுவலகத்திற்கு வராமல் இருந்ததாகவும் விதிமுறைகளின்படியே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. டிசிஎஸ் தரப்பு மேலும், "இது அங்கீகரிக்கப்படாத விடுப்புக் காலம் தொடர்பானது. இதுபோன்ற சிக்கல்களுக்கு வழக்கமான நடைமுறையின்படி, அவர் அங்கீகரிக்கப்படாத விடுப்பு எடுத்த காலகட்டத்திற்கான சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த ஊழியர் தற்போது பணிக்குத் திரும்பி, மீண்டும் பணிக்குச் சேர கோரிக்கை விடுத்துள்ளார். இப்போது மோர் தங்கத் தற்காலிகமாகத் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இப்போது அலுவலகத்திற்கு வெளியே இல்லை. இந்த விவகாரத்தை நியாயமான முறையில் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம்" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications