பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு
ஸ்ரீநகர் : சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டத் தேர்தல்கள் அமைதியாக நடைபெற்றுள்ள நிலையில், 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு என்னும் இடத்தில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பீரங்கி குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிர் சேதம் ஏதுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின், மோக்ரா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் பலியாகினர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை சீர் குலைக்கவே இந்த தாக்குலை பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications