தேசிய அரசியலில் ட்விஸ்ட்? ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி? ஆந்திராவில் பரபரக்கும் களம்!
அமராவதி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் முன்வைத்த வாக்கு திருட்டுக் குற்றச்சாட்டு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரகசியமாக ராகுல் காந்தியுடன பேசி வருவதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு பாஜகவின் என்டிஏஐவில் முக்கிய கூட்டணிக் கட்சியாக உள்ள நிலையில், ஜெகனின் இந்தக் குற்றச்சாட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடனேயே பாஜக கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி. சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

பரபர குற்றச்சாட்டு
நாட்டின பல்வேறு பகுதிகளிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகவும் பல தொகுதிகளில் காங்கிரஸ் தோல்விக்கு இதுவே காரணம் என்றும் விமர்சித்திருந்தார். இது நாடு முழுக்க பேசுபொருளாக மாறியது. பல மாநிலங்களில் வாக்காளர் திருட்டைக் கண்டித்து போராட்டங்களும் நடைபெற்றன. இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதாவது சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மூலம் ராகுல் காந்தியுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால்தான் ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து அவர் பேசுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 'வாக்கு திருட்டு' குறித்தும், அர்விந்த் கெஜ்ரிவாலின் தோல்வி குறித்தும் ராகுல் காந்தி ஏன் பேசவில்லை என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
ராகுல் அமைதியாக இருக்க காரணம் என்ன!
தடேப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, "ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கையின்போது அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்திற்கும் கடைசியாக எண்ணப்பட்ட வாக்கு சதவீதத்திற்கும் இடையே 12.5 சதவீதம் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் தோற்கடிக்கப்பட்டார். இவை குறித்து ஏன் ராகுல் காந்தி பேசவில்லை? ஏனெனில் சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டி மூலம் ராகுல் காந்தியுடன் தொடர்பில் இருக்கிறார்.

சீக்ரெட் தொடர்பு
நேர்மை இல்லாமல் இருக்கும் ராகுல் காந்தி போன்றவரைப் பற்றி நான் என்ன கருத்து கூறுவது? காங்கிரஸ் கட்சியினர் சந்திரபாபு நாயுடுவைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. ஆந்திர காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாக்கூர் என்னை மட்டுமே குறிவைத்து பேசுகிறார். ஆனால், டிடிபி ஆட்சியில் ஆந்திராவில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து ஒருபோதும் பேசுவதில்லை. சந்திரபாபு நாயுடு ராகுல் காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.. ராகுல் காந்தி ஆந்திராவைப் பற்றிப் பேசாததற்கு இதுதான் காரணம்" என்றார்.
சந்திரபாபு நாயுடு மறுப்பு
இருப்பினும், ஜெகன் மோகன் ரெட்டியின் இந்தக் குற்றச்சாட்டை சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான நாரா லோகேஷ் திட்வட்டமாக மறுத்துள்ளார். தங்கள் ஒரே ஆந்திர மக்களுடன் மட்டுமே 'தொடர்பை' வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது ட்விட்டரில், ""உங்கள் 'வாக்கு திருட்டு' சாக்குகளை மறந்து விடுங்கள். உங்கள் ஆட்சியில் நடந்த தொடர்ச்சியான ஊழல்களால் சோர்வடைந்தது மக்கள் உங்களை வெளியேற்றினார்கள். நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எடுபடாது. எங்கள் இரட்டை எஞ்சின் ஆட்சி செயல்பட வந்துள்ளது, நரேந்திர மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ், ஆந்திரப் பிரதேசம் மீண்டும் நம்பர் 1 மாநிலமான மாறும்" என்றார்.












Click it and Unblock the Notifications