ஆவேசமான ஜெகன்.. புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் அலுவலகம்! அலறும் ஆந்திரா
அமராவதி: முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் அமராவதி அருகே அமைந்திருந்தது.. அந்த கட்டிடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததால் அது இடிக்கப்பட்டது. இது ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

தெலுங்கு தேசம் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்ட ஜனசேனா 21 இடங்களில் வென்றது. இதையடுத்து அக்கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
வன்முறை: ஆந்திராவில் தேர்தல் முடிவுகள் வெளியான உடன் அங்குப் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இடங்களில் வன்முறை நிகழ்வுகள் நடந்தது. அங்குள்ள ஜெகன் கட்சி நிர்வாகிகளின் வீடுகளைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடந்தன. இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஓயவே சில வாரங்கள் ஆனது.
அமராவதி அருகே தடேபள்ளியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சி மத்திய அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்ததாகப் புகார்கள் எழுந்தன. அந்த கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், அது ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த ஒய்.எஸ்.ஆர். கட்சி மத்திய அலுவலகத்தையும் புல்டோசர்கள் மூலம் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடும் கண்டனம்: இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டி இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் சந்திரபாபு நாயுடு இதுபோல நடந்து கொள்வதாக அவர் சாடியுள்ளார். இந்த கட்சி அலுவலகத்தின் மீதான ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், கட்டிடத்தை அதிகாரிகள் இடித்தது தவறான செயல் என சாடியுள்ளனர்.
இது தொடர்பாக ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மிக மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். தடேபள்ளியில் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை புல்டோசர் கொண்டு ஒரு சர்வாதிகாரி இடித்துத் தள்ளி இருக்கிறார்.
பயப்பட மாட்டோம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஆந்திராவில் தேர்தலுக்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சி எப்படி இருக்கும் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பயந்துவிடாது.
நாங்கள் மக்கள் சார்பாக மக்களுக்காகப் போராடுவோம். சந்திரபாபுவின் இந்த மிக மோசமான செயலை நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயகவாதிகளும் கண்டிக்க வேண்டும்" என்று அவர் சாடியுள்ளார்.
ஹைதராபாத் இல்லம்: முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள லோடஸ் பாண்ட் பகுதியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான இல்லத்தின் ஒரு பகுதியும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஜெகனின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கும் அறை நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்த நிலையில், அதை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றியது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications