2014ல் வெளியான தீர்ப்புக்கு மாறாக உள்ளது.. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதேபோல தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக கியூப்பா என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர்.
இந்த அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்தனர். 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மீறுவதை போல தமிழக அரசின் சட்டம் இருப்பதாக அவர்கள் கூறினர். 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக ஒரு சட்டத்தை கொண்டுவர என்ன அவசியம் ஏற்பட்டது, இதற்கான சட்ட காரணங்களை நீங்கள் கூற முடியுமா என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதேபோல, ஜல்லிக்கட்டு சட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை விலங்குகள் நல வாரியத்திடம் நீதிமன்றம் எழுப்பியது.
அதேநேரம், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் இன்னும் இரு நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவரப்பட்ட வழிமுறைகள் குறித்து அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications