சட்ட மரபை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்.. தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் பாய்ச்சல்
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தியது.
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக கியூப்பா என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகள் குறித்து நீதிபதிகளில் ஒருவரான தீபக் மிஸ்ரா கடும் அதிருப்தி வெளிப்படுத்தினார்.
நீதிபதி கூறியதாவது: வழக்கு நிலுவையில் உள்ளபோது அது பற்றி பேசவேகூடாது என்பது சட்டம். ஆனால் இதை மீறி தமிழகத்தில் எப்படி போராட்டம் நடத்தினார்கள்? சட்ட மரபை மீறி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது ஏன் ?
தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றதால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு சட்டம் கொண்டு வந்ததா? அப்படி போராட்டத்திற்காக சட்டம் கொண்டுவரப்பட்டால், காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று அந்த மாநில அரசு நிலைப்பாட்டை மாற்றினால் தமிழகம் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?
இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துங்கள் என்று தமிழக அரசு வழக்கறிஞருக்கு அறிவுரை சொல்லியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications