ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. ஸ்ரீநகரில் அதல பாதாளத்திற்கு போன வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையத்தின் டேட்டா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காஷ்மீரில் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 15 தொகுதிகளும் அடங்கும். பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பெல் ஆகிய பகுதிகளில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வாக்குப்பவு சதவிகிதம் இருந்தது. ஆனால், ஸ்ரீநகரில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த மாநிலம் காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

முதல்கட்ட தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், நேற்று 2 வது கட்ட தேர்தல் நடந்தது. 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. 3 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு நடந்த 6 மாவட்டங்களில் ஜம்மு பிராந்தியத்தில் 3 மாவட்டங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களும் அடங்கும்.
காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. வாக்குப்பதிவு நேற்று மாலை முடிந்த நிலையில், 57.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ரேசாய் பகுதியில் 74.70 சதவிகித வாக்குகளும் குறைந்தபட்சமாக ஸ்ரீநகரில் 29.81 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. பட்காம் மாவட்டத்தில் மக்கள் விறுவிறுப்புடன் வாக்களித்ததை காண முடிந்தது. ஆனால் ஸ்ரீநகரில் காலையில் இருந்தே வாக்குச்சாவடிக்ள் வெறிச்சோடி கிடந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஸ்ரீநகரில் 27.77 சதவிகித வாக்குகளும் கந்தர்பேல் மற்றும் பட்காம் மாவட்டத்தில் முறையே 73.11 மற்றும் 67.21 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்து இருந்தாலும், 2024 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்துள்ளது. பட்காம் தொகுதியில் உமர் அபதுல்லாவுக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முந்தாசிர் மெஹ்திக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. உமர் அப்துல்லா கந்தர்பெல் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications