என்ன கொடும சார் இதெல்லாம்.. பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்த தலைமைக்காவலர் சஸ்பெண்ட்
ஸ்ரீநகர்: ஜம்முவில் மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், தலைமைக்காவலர் ஒருவர் உட்கார்ந்து இருக்கும் படங்கள் வைரலாக பரவி வருகின்றன. அதிகாரியின் மடியில் உட்கார்ந்த தலைமைக் காவலரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், அங்குள்ள தலமைக்காவலர் ஒருவர் வேண்டும் என்றே மடியில் உட்கார்ந்து இருக்கும் படங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் அடங்கிய இரண்டு புகைப்படங்கள் வலம் வருகின்றன. இவை ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் போலீஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. புகைப்படத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் உட்கார்ந்திருக்கும் தலைமைக்காவலர் ஜாகீர் உசேன் என்பது அடையாளம் தெரியவந்தது.
மேற்கண்ட சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றதாக ராஜவூரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படங்கள் வெளியான உடன், தலைமைக்கவலர் ஜாகீர் உசேன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், அவரை மாவட்ட போலீஸ் லைன்ஸ் பிரிவுக்கு பணியிடம் மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்து விசரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராகவும் உடைந்தையாக செயல்பட பிற போலீஸ் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சம்பவம் குறித்து விசரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் ராஜவூரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications