காஷ்மீர் எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்.. 1 மணி நேரமாக தொடர்ந்து தாக்குதல்.. பதற்றம்!
இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறது.
Recommended Video

ஸ்ரீநகர்: இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைக்கு இப்போதைக்கு சரியாவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவரும் பாகிஸ்தான் இன்னொரு புறம் எல்லையில் தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் தாக்கியது
சரியாக 6 மணிக்கு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. உயர் ரக துப்பாக்கிகள் மூலம் இந்திய துருப்புகளை நோக்கி, பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. தொடர்ந்து விடாமல் பாகிஸ்தான் ராணுவம் தாக்கிக் கொண்டே இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் அங்கு குவிக்கப்பட்டது.

இந்தியா பதிலடி
இதையடுத்து இந்தியாவும் திருப்பி தாக்க தொடங்கியது. இந்திய ராணுவமும் திருப்பி தாக்கியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கடுமையான தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது.

மோசம்
இந்த சம்பவம் காஷ்மீரின் கிருஷ்ணகாதி எனப்படும் பூன்ச் அருகே உள்ள கிராமத்தில் நடந்தது. இந்த தாக்குதல் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. அங்கிருந்த மக்கள் நேற்றே வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுத்தப்பட்டது
அதிகாலை 6 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. 7.10 மணிக்கு தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய தரப்பில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது பாதுகாப்பு கருதி இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications