பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த காஷ்மீர் மக்களுக்கு ரூ,10 லட்சம்.. CM உமர் அப்துல்லா அறிவிப்பு
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதனால் ஆடிப்போன பாகிஸ்தான் செய்வது அறியாமல் வழக்கம் போல் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. பீரங்கி குண்டுகளை வைத்து காஷ்மீர் எல்லையோரத்தில் இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பல விமான தளங்கள் அழிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவிடம் கெஞ்சி கூத்தாடிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
இதனை அடுத்து அமெரிக்க அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் உறவினர்களை கட்டி அணைத்த உமர் அப்துல்லா, அரசு எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். இ
தனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் நிதி உதவி அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிதலமைந்த பகுதிகளை நேரில் சென்று உமர் அப்துல்லா பார்வையிட்டார்.
எல்லையில் பதற்றம் தணிந்த பிறகு பாதுகாப்பு முகாமில் உள்ளவர்கள் அவர்களுடைய சொந்த இடத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்திய நிலையில், அதன் பாகங்கள் பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறது. இந்த சிதறி கிடக்கும் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என உள்ளூர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற பாகங்களை எங்கேயாவது கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications