உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.. மத்திய அரசு நடவடிக்கை!
ஜம்மு காஸ்ஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஸ்ஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது.

அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. அங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் உமர் அப்துல்லா உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இணைய பயன்பாட்டுக்கு தடை, செல்போன் சேவைகள் துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவுகள் ஆகியவையும் அமல்படுத்தப்பட்டன. இன்னும் அங்கு அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில்தான் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் இருக்கிறார்கள்.
இவர்கள் அங்கு 6 மாதமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று கூட பிரதமர் மோடி லோக்சபாவில் இவர்களை பற்றி பேசினார். இந்த மூன்று தலைவர்களும் காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைத்தார்கள். இதுபோன்ற கொள்கை கொண்டவர்களை சுதந்திரமாக விட கூடாது. அவர்கள் மக்களை தவறான வழிக்கு அழைத்து செல்வார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்ட்டார்.
இந்த நிலையில் தற்போது உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களின் வீட்டு காவலை நீட்டிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 6 மாதங்களுக்கு இவர்கள் எந்த வித விசாரணையுமின்றி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள். இதற்கு முன்பே ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டம் பாய்ந்தது. அதன்பின் இந்த சட்டம் கடந்த ஜனவரியில் அவருக்கு நீட்டிக்கப்பட்டது.
இதில் செய்யப்படும் கைதுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டியது கிடையாது. பொதுவாக இந்த சட்டம் மூலம் தீவிரவாதிகள், கலவரக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் காஷ்மீரில் மூன்று முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications