ஜெ. வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய கூடாது.. மூத்த காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேட்டி!
பெங்களூர்: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.வி.ராஜசேகரன் தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.வி.ராஜசேகரன் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
இது தமிழக அரசு மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியசாமி ஆகியோர் சம்பந்தப்பட்டது. ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், ஏற்கனவே காவிரி பிரச்சினை காரணமாக இரு மாநில மக்களிடையே சுமூகமான உறவு இல்லை. எனவே தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான இந்த விவகாரத்தில் தலையிடுவதை கர்நாடக அரசு தவிர்க்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார். எனவே அவரது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அந்த மாநில தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற எனது கருத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி, மாநில தலைவர் ஜி.பரமேஸ்வர், முதல்வர் சித்தராமையா ஆகியோரிடம் தெரிவிப்பேன். காங்கிரசை பொறுத்த வரை இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பது கட்சி மேலிடம்தான். எனவே இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தும்படி ஏற்கனவே சோனியாகாந்திக்கு 3 பக்க கடிதம் எழுதி உள்ளேன்.
என்னை பொறுத்தவரை அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியாவின் பரிந்துரை ஏற்கத்தக்கதல்ல. அரசு வக்கீல் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய பரிந்துரைக்க அவருக்கு உரிமை உள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைச்சரவை தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு எம்.வி.ராஜசேகரன் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்ட பிரிவு தலைவர் தனஞ்சய், மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரும், கர்நாடகா அப்பீல் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளனர். ராஜசேகரனும் இவ்வாறு கூறியுள்ளார். இவை கர்நாடக அரசின் மனநிலையை பிரதிபலிக்கும் பேட்டிகளாகவே பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications