ஜெயலலிதா பூரண நலம்.. திருப்பதியில் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் அடைந்துள்ளதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் திருப்பதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
திருப்பதி: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நலம் பூரண குணம் அடைந்துள்ளதால் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திருப்பதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல் பூரணமாக குணம் அடைந்து விட்டதாக அப்போலோ நிர்வாகம் அறிவித்துள்ளது. என்றாலும் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு உடல் பூரண குணம் அடைந்துவிட்டதால், தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருப்பதிக்கு சென்று ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள பத்மாவதி ஓய்வு விடுதியில் தங்கி இருந்தார். பின்னர், இன்று அதிகாலை 5.30 மணிக்கு வி.ஐ.பி. தரிசன நேரத்தில் ஏழுமலையான் கோவிலுக்கு அவர் சென்று சிறப்பு பூஜை செய்தார்.
அங்கு, அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர், ரங்க நாயகர் மண்டபத்தில் லட்டு பிரசாதம் அவருக்கு வழங்கப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications