ஜெ.வின் போலி கையெழுத்துடன் சசிகலாவை அதிமுக துணை பொதுச்செயலராக்க சதி: சசிகலா புஷ்பா ஷாக் கடிதம்!
டெல்லி: ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ய அவரை சுற்றியுள்ளவர்கள் சதி செய்து வருவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆளுநருக்கு சசிகலா புஷ்பா எழுதியுள்ள கடிதத்தில், ஜெயலலிதா போன்ற போலி கையெழுத்து மூலம் அதிமுகவுக்கு துணைப் பொதுச்செயலரை நியமிக்க சதி நடக்கிறது. முதல்வரின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்த அவரை சுற்றியுள்ள கும்பல் முயற்சி செய்து வருகிறது.

எனவே, அரசு நிர்வாகம் தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் வரும்போது, அதில் முதல்வர் கையெழுத்து இருந்தால், நன்றாக பரிசீலிக்கவேண்டும், இவ்வாறு ஆளுநருக்கு சசிகலா புஷ்பா திடீர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக கவுன்சிலர் ஒருவர் சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரது பேட்டி தூண்டுதலின்பேரிலானது என்றும், அதிமுக தொண்டர்கள் நினைத்தால் சசிகலா நடராஜனை அப்பல்லோவிலிருந்து வெளியேற்றுவர் என்றும், டெல்லியில் சசிகலா புஷ்பா பேட்டியளித்த சிறிது நேரத்தில் இந்த கடிதம் விவகாரம் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications