ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கு- வாதத்தை முடிக்க கூடுதல் அவகாசம் கோரும் பிவி ஆச்சார்யா
டெல்லி: சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான இறுதி பதில் வாதங்களை நிறைவு செய்ய தமக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியொர் அடங்கிய பெஞ்ச் முன் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகா அரசு தரப்பு, ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பு தமது வாதங்களை முன்வைத்துவிட்டனர்.

இவற்றுக்கு இறுதியாக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா பதிலளித்து வருகிறார். மீண்டும் நேற்று தொடங்கிய விசாரணையின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கும் நோக்கத்தில் பல நிறுவனங்களை சசிகலா தொடங்கியதாக குறிப்பிட்டார். அப்போதே நீதிபதிகள் உங்கள் வாதத்தை விரைவாக முடித்து கொள்ள முடியுமா என ஆச்சார்யாவிடம் கேட்டனர். இன்றைய விசாரணையின் போது பிவி ஆச்சார்யா, தாம் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரினார்.
உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அடுத்த வாரம் தொடங்குகிறது. ஆகையால் கோடை காலத்திலும் விசாரணையை தொடருவதா? என்பதை நீதிபதிகள் முடிவு செய்ய உள்ளனர். அப்படி கோடை கால விடுமுறையிலும் விசாரணையை தொடர முடிவு செய்தால் இதே நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சிறப்பு பெஞ்சாக மாற்றப்பட வேண்டும். இது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்பட உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications