ஜெயலலிதா தனது சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?: சுப்ரீம்கோர்ட்டில் ஆச்சார்யா
டெல்லி: அரசு ஊழியர் நடத்தை விதிகள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தமது இறுதி வாதங்களை முன்வைத்தார். அப்போது அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்குப் பொருந்தாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறியிருப்பது தவறானது.
அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள் என்பது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு பொருந்தும். இதனடிப்படையில் ஜெயலலிதா ஒரு அரசு ஊழியர். தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டியது அவரது கடமை. ஆனால் ஏன் ஜெயலலிதா தம்முடைய சொத்து விவரங்களை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்தார்?.
ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரி ஆவணங்களை வைத்து அவரை விடுவித்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்படும் வழக்குகளில், எப்படி வருமானம் வந்தது என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் தெளிவாகவே கூறியுள்ளது.
ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அப்படி விவரிக்கப்படவில்லை. இதற்கு மாறாக வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்களை காட்டியிருக்கிறார்கள். வருமான வரித்துறை ஒருவருக்கு எப்படி வருமானம் வந்தது என்பதை பார்ப்பதில்லை. இதனால் வருமான வரி ஆவணங்களைக் காட்டிவிட்டு இப்படித்தான் வருமானம் வந்தது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வருமான வரி ஆவணங்களை சொத்துக்கான ஆதாரமாக கருதவே முடியாது என்றார் ஆச்சார்யா.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications