சட்டவிரோத பணத்தை சசிகலாவுக்கு அன்பளிப்பாக கொடுத்து பின் கடனாக வாங்கிய ஜெ.: ஆச்சார்யா திடுக் தகவல்
டெல்லி: சட்டவிரோதமான பணத்தை சசிகலாவுக்கு அன்பளிப்பாக கொடுப்பது போல் கொடுத்து அதையே கடனாக திரும்ப வாங்கியிருக்கிறார் ஜெயலலிதா என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடகா அரசு தரப்பு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் தரப்பு இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வாதங்களுக்கு பதில் அளித்து கர்நாடகா அரசின் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது வாதங்களை முன்வைத்து வருகிறார். அவர் நேற்று தமது இறுதிவாதத்தில் முன்வைத்ததாவது:
ஜெயலலிதா தமக்கு வந்த சட்டவிரோதமான பணத்தை அவரது தோழி சசிகலாவுக்கு அன்பளிப்பாக மாற்றி கொடுத்துள்ளார். பின்னர் இதை சசிகலாவிடம் இருந்து மீண்டும் கடன் என்ற பெயரில் ஜெயலலிதா திரும்ப பெற்றிருக்கிறார்.
சசிகலா உள்ளிட்டோரின் பெயரில்தான் பல நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. சட்டவிரோத வருவாயை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஜெயலலிதா பொதுச்செயலராக இருக்கும் அதிமுகவும் கூட சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அதிமுக கட்சியில் மட்டுமல்ல ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டிலும் சசிகலாவின் அதிகாரமே ஓங்கி இருக்கிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆச்சார்யா வாதிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் பிவி ஆச்சார்யா இன்று தமது வாதங்களை நிறைவு செய்ய உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications