தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - ஜெயலலிதா வேண்டுகோள்
பெங்களூர்: அதிமுகவினர் யாரும் என்னைப் பார்க்க சிறைக்கு வர வேண்டாம். தமிழக மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தகவலை ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறையில் ஜெயலலிதா யாரையும் பார்ப்பதில்லை என்றும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரைக் கூட இதுவரை நான்கு முறை மட்டுமே அவர் பார்த்துள்ளதாகவும் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமைதியாக இருக்கும் ஜெயலலிதா
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ஜெயலலிதா சிறையில் அமைதியாக தனது நாட்களைக் கழித்து வருகிறார். யாருடனும் அவர் தேவையில்லாமல் பேசுவதில்லை.

தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை
சிறை வளாகத்தில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. தனது சிறை அறையிலேயே இருந்தார்.

பேப்பர் படிக்கிறார்
சிறை அறையில் தனக்கு வழங்கப்படும் செய்தித் தாள்களை மட்டும் அவர் படித்து வருகிறார்.

யாரையும் சந்திக்க விரும்பவில்லை
தன்னை வந்து யாரும் சந்திப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. அரசியல் தலைவர்கள், தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சியினர் என யாரையும் சந்திக்க அவர் விரும்பவில்லை.

நான்கு முறை சசி, இளவரசி, சுதாகரனுடன் சந்திப்பு
சிறையில் அடைக்கப்பட்ட செப்டம்பர் 27ம் தேதி வரை இதுவரை நான்கு முறை மட்டுமே அவர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

அமைதி காக்க வேண்டுகோள்
தமிழக மக்கள் அமைதி காக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கட்சியினர் யாரும் தன்னை சந்திப்பதற்காக பெங்களூருக்கு வருவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மைசூர் சாமுண்டேஸ்வரியை வணங்கி வழிபடுகிறார்
மைசூர் சாமுண்டேஸ்வரி படத்தை கேட்டு வாங்கி வைத்துள்ளார். அதை காலையும், மாலையும் அவர் வணங்கி வழிபட்டு வருகிறார்.

நல்ல நலமுடன் இருக்கிறார்
ஜெயலலிதாவின் உடல் நலம் மிக சிறப்பாக உள்ளது அவருக்கு தினசரி 3 முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. மருத்துவர்கள் விஜயக்குமார், சாந்தராமன் ஆகியோர் பரிந்துரைக்கும் உணவுகள் வழங்கப்படுகின்றன.

வாக்கிங் போவதில்லை
முதலில் காலையில் வாக்கிங் போய் வந்தார். தற்போது அதை நிறுத்தி விட்டார். சிறை அறையை விட்டு வெளியேறுவதில்லை.

யாரிடமும் உதவி கேட்பதில்லை
சிறையில் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று எந்த சலுகையையும் ஜெயலலிதா கேட்பதில்லை. யாருடைய உதவியையும் கூட அவர் கேட்பதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications