For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: 'சிவோட்டர் எக்சிட்போல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி 122 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று சிவோட்டர் எக்சிட்போல் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பீகாரில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. இன்று இறுதி கட்ட தேர்தல் வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு ஓய்ந்தது. இதையடுத்து தேசிய தொலைக்காட்சி சேனல்களில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளன.

JD(U) alliance will for the government: Exit poll

டைம்ஸ்நவ்-சிவோட்டர் எக்சிட் போல் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜக கூட்டணி 111 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டணி 122 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிற கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

பாஜக கூட்டணி பெறும், வாக்கு சதவீதம் 41 சதவீதமாகவும், ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி பெறும் வாக்கு 42 சதவீதத்தை ஒட்டியும் இருக்கும். பிறர் 17 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிது.

இந்த கருத்துக் கணிப்பு மூலம், நிதீஷ்குமார் கூட்டணிக்கு பாஜக கூட்டணி கடும் சவாலாக இருக்கும் என்பதும், ஆனால், நிதீஷ்குமார் கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதும் தெளிவாகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP-led alliance gets 111 seats, JD(U) alliance 122, others 10, according to CVoter Exit Poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X