பணம் பெற்றுக் கொண்டு விளையாடிய சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருதா?: ஐ. ஜ.தளம் கேள்வி
டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி.
நேற்று முன் தினம் தனது கடைசிப் போட்டியை ஆடினார் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். அதனைத் தொடர்ந்து முன்பு அளித்த வாக்குறுதியின் படியே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழக்க இருப்பதாக அறிவித்தது மத்திய அரசு.
ஆனால், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது..

விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின்
‘கிரிக்கெட் விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின். இவர் காசு வாங்கிக் கொண்டுதான் இத்தனை காலம் விளையாடினார். அவருக்குப் போய் பாரத ரத்னா விருது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

இவரை விட தகுதியானவர்கள் பலர் உள்ளனரே
இவரை விட தகுதியான மிகச் சிறந்தவர்கள் இந்த விருதுக்கும், கெளரவத்திற்கும் தகுதியான பலர் உள்ளனர்.

கேலிக்கூத்தாக்கி விட்டனர்
பாரதரத்னா விருதே கேலிக்குரியதாக மாறி விட்டது. இதை ஒழிக்க வேண்டும். அதற்கு இப்போது முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது.

ஓசியில் விளையாடவில்லை சச்சின்
ஓசியில் விளையாடவில்லை சச்சின். பல கோடி பணத்தை விளையாடி சம்பாதித்தவர் அவர்.

தியான் சந்த்துக்கு ஏன் தரவில்லை...
தியான்சந்த்துக்கு ஏன் இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்படவி்லை. இதை அரசு விளக்க வேண்டும்' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications