குஜராத் தேர்தல் முடிவை துல்லியமாக கணித்த ஜோதிடர்.. கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறுமாம் தெரியுமா?
Recommended Video

பெங்களூர்: குஜராத் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்துக் கூறிய கர்நாடகாவை சேர்ந்த ஜோதிடர் ஒருவர், அடுத்த ஆண்டு கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்றும் ஆரூடம் கூறியுள்ளார்.
உடுப்பியை சேர்ந்த பிரகாஷ் அம்முன்னாய என்ற அந்த ஜோதிடர், குஜராத்தில் காலை 10 மணிவரை காங்கிரஸ் முன்னிலை பெறுவதை போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் 10 மணிக்கு மேல் அது மாறி பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்பதே கிரக நிலை என்று கணித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஒருநாளைக்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த தகவலை வெளியிட்டார்.

ஜோதிடர் வாக்கு
ஜோதிடர் கூறியதை போலவே, குஜராத் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. இதையடுத்து கர்நாடக மீடியாக்கள் அவர் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் கர்நாடகாவில் நடைபெற உள்ள, சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஜோதிடரிடம் கேட்டு வருகிறார்கள்.

பாஜக தனிப்பெரும் கட்சி
இதுகுறித்து 'ஒன்இந்தியாவுக்கு' ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது: அடுத்த ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். ஆனால் அறுதி பெரும்பான்மை பெற முடியாது. பாஜகவை ஆட்சியமைக்கவிடாமல் தடுக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைக்கும்.

சிஎம் குமாரசாமி
கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக பதவியேற்பார். துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த இப்போதைய அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதவியேற்பார். முதல்வர் சித்தராமையாவுக்கு, பிப்ரவரி மாதத்திலிருந்து உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம். இருப்பினும் இந்த கூட்டணி அரசு 8 மாதங்களிலேயே கலைந்துவிடும்.

பாஜக ஆட்சியை பிடிக்கும்
இதன்பிறகு, நாடாளுமன்ற தேர்தலோடு, கர்நாடகாவுக்கும் தேர்தல் நடைபெறும். அப்போது, பாஜக அறுதி பெரும்பான்மையோடு கர்நாடகாவில் மகுடம் சூட்டி ஆட்சிக்கு வரும். அப்போது ஆர்.எஸ்.எஸ் கை காட்டும் ஒரு பிரம்மச்சாரி முதல்வராக மகுடம் தரிப்பார். அவரது ஜாதகம் எனது கைக்கு இன்னும் வரவில்லை. ஜாதகம் கைக்கு வந்ததும் அவர் பெயரை வெளியிடுவேன். இவ்வாறு பரபரப்பு தகவல்களை தெரிவித்தார் ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications