போதிய எரிபொருள் இன்றி தரையிறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்... கவனக்குறைவால் விமானிகள் சஸ்பெண்ட்
டெல்லி : தோஹாவிலிருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் போதிய எரிபொருள் இல்லாமல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியதையடுத்து, கவனக்குறைவாக இருந்த விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்டைக் கண்டித்து சன விமானிகள் விமானங்களை இயக்காமல் தாமதப்படுத்தி வேலை நிறுத்த்தில் ஈடுபட்டனர்.
தோஹாவில் இருந்த 142 பயணிகள், 8 விமான சிப்பந்திகளுடன் கொச்சிக்கு கடந்த 18-ம் தேதி வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் போதுமான எரிபொருள் இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் தரையிறங்கியது.

இதுகுறித்து முறையான விசாரணை நடத்துமாறு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விமான விபத்து விசாரணை ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.
கொச்சியில் வானிலை மோசமாக இருந்ததால் வானிலேயே 3 முறை வட்டமிட்ட அந்த விமானம் அருகிலுள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தது. ஆனால், அங்கும் வானிலை மோசமாக இருந்ததால் 4-வது முயற்சியில் தரையிறக்கப்பட்டது.
ஆனால், போதுமான எரிபொருள் இன்றி விமானத்தை தரையிறக்குவது போக்குவரத்து விதிமீறல் ஆகும். ஒரு விமானம் டேக்ஸி எரிபொருள், டிரிப் எரிபொருள், அவசரகால எரிபொருள் என 3 வகையாக எரிபொருளை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர, மாற்று எரிபொருளாக 30 நிமிடங்கள் வரை விமானத்தை இயங்க வைக்கக்கூடிய அளவிற்கு எரிபொருள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால், விதியைமீறி தரையிறக்கப்பட்ட அந்த போயிங் விமானமானது மாற்று எரிபொருளாக 270 கிலோ எரிபொருளை மட்டுமே வைத்திருந்தது. விதிமுறைகளின்படி, 1500 கிலோ எரிபொருளை வைத்திருக்க வேண்டும்.
போயிங் ரக விமானம், ஓடுதளத்தில் செல்லும்போது 10 நிமிடங்களுக்குள் 270 கிலோ எரிபொருளை தீர்த்து செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடியான நேரத்தில் அருகில் உள்ள பெங்களூர் விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பாமல், திருவனந்தபுரத்திற்கு திருப்பியதும் விதிகளை மீறிய செயலாகும்.
இதுதொடர்பான விசாரணையைத் தொடர்ந்து அந்த விமானத்தை தரையிறக்கிய விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சஸ்பென்ட்டை கண்டித்து சக விமானிகள் விமானத்தை இயக்காமல் தாமதப்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications