ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவுக்கு பதிலடி தர வெல்வாரா ஹேமந்த் சோரன்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தமது பெயரில் பெற்றிருந்தார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கொடுத்தது.

தேர்தல் ஆணையம் தடாலடி பரிந்துரை
பாஜகவின் இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்ய, மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ்க்கு பரிந்துரைத்தது. இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஆளுநர், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னமும் ஆளுநர் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார்.

மாநிலங்களில் உலா
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைபேசிவிடக் கூடும் என்பதால் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஹேமந்த் சோரன். தற்போது தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் முகாமிட்டார் ஹேமந்த் சோரன். தற்போது இந்த எம்.எல்.ஏக்கள் ராஞ்சி திரும்பிவிட்டனர்.

ஆளுநர் ரமேஷ் பாய்ஸ்
இதனிடையே ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸை ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில், தேர்தல் ஆணையம் என்ன பரிந்துரை செய்துள்ளது? என்பதை விளக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், டெல்லி சென்றார்.

நாளை வாக்கெடுப்பு
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் ஹேமந்த் சோரன் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதாவது தமது அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது என்பதை ஹேமந்த் சோரன் தாமாகவே முன்வந்து நிரூபிக்க உள்ளார். 81 எம்.எல்.ஏக்களைக் ஜார்க்கண்ட் சட்டசபையில் கட்சிகளின் பலம்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30; காங்கிரஸ் 18; ராஷ்டிரிய ஜனதா தள்- 1; பாஜக கூட்டணி- 28. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்து ஆபரேஷன் தாமரையை பாஜக அரங்கேற்றினால் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications