ஜார்க்கண்ட் அரசு தப்புமா? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. காத்திருக்கும் பாஜக! யாருக்கு எவ்வளவு பலம்?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், வாக்கெடுப்பில் பங்கேற்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்எல்ஏக்கள் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு ராஞ்சி வந்தடைந்தனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் இருக்கும் பலம் மற்றும் ஆளும் கூட்டணிக்கு இருக்கும் பலம் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் கடந்த மாதம் 20-ஆம் தேதி ஒரு முறை மட்டுமே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

 Jharkhand Floor Test Tomorrow JMM alliance MLAs returning to the state today from Hyderabad

மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஹேமந்த் சோரன் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி பல மணி நேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, ஜார்க்ண்ட் ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

சாம்பாய் சோரன்: ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால், அவரது மனைவி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதல்வராக பொறுப்பெற்ற சாம்பாய் சோரன் நாளை திங்கட்கிழமை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார்.

பெரும்பான்மை எண்ணிக்கை உள்ளதா?: நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் குதிரை பேரத்தை தடுப்பதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சி கூட்டணி எம்பிக்கள் தனி விமானத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளை சேர்ந்த 39 எம் எல்.ஏக்களும் இரண்டு தனி விமானங்களில் ஐதராபாத் அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இன்று ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு எம்.எல்.ஏக்கள் ராஞ்சிக்கு வந்தடைந்தனர். ஜார்க்கண்டில் நாளை நம்பிக்கை நடைபெற உள்ள நிலையில், அங்கு உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை உள்ளதா? என்பது குறித்து பார்ப்போம்.

46 எம்எல்ஏக்கள்: ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகும். இதில் ஒரு இடம் காலியாக இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி அரசுக்கு பெரும்பான்யை விட கூடுதலாக 5 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதாவது ஜேஎம்எம் (28 எம்எல்.ஏக்கள்), காங்கிரஸ் (16), ஆர்ஜேடி மற்றும் சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 எம்எல்ஏ என மொத்தம் 46 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பாஜகவுக்கு எத்தனை: பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜார்க்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏதாவது அதிரடி ட்விஸ்ட் எதுவும் நடைபெற்றால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு தோல்வி அடையும். தற்போது உள்ள எண்ணிக்கை படி பார்த்தால் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு எளிதியில் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிருபிக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+