‛‛இது அவதூறு தான்’’.. அமித்ஷா தொடர்பான ராகுலின் வழக்கை ரத்து செய்ய மறுத்த கோர்ட்.. மனு தள்ளுபடி
ராஞ்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியிருந்ததாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா, வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே, அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்திருந்தார். இந்நிலையில், இரண்டாவது முறையாக இவர் மீது அவதூறு வழக்கு பதிவாகியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு குறித்து விஜய் மிஸ்ரா கூறுகையில், "கடந்த 2018ம் ஆண்டு நான் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்தேன். பெங்களூருவில் நடந்த கூட்டம் ஒன்றில் அமித் ஷாவை கொலைக்காரர் என்று குற்றம்சாட்டி ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்த குற்றச்சாட்டினை கேட்ட போது, பாஜக கட்சிக்காரனாக மிகவும் வேதனை அடைந்தேன். எனவேதான் வழக்கு தொடர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. பாரத் ஜடோ நியாய யாத்திரையில் இருந்த ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரினார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், "பாஜக தலைமை, பொய்யர்களால் ஆனது என்றும், அதன் தலைவர்களை கொலை குற்றவாளிகள் என்றும் ராகுல் விமர்சித்திருக்கிறார். இது நிச்சயமாக அவதூறுதான்" என்று கூறியிருந்தனர். இதனையடுத்து, மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர். இது ராகுல் காந்திக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டத்தை போல, ஏற்கெனவே மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொரடப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனவே அவரது எம்பி பதவியும் பறிபோனது. பின்னர் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தை நாடி தடை உத்தரவை பெற்ற பின்னர்தான் அவரது எம்பி பதவி மீண்டும் கிடைத்து.
எனவே அமித்ஷாவை அவதூறாக பேசிய வழக்கில், அவருடைய எம்பி பதவி பறிபோய்விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. இப்படி இருக்கையில், ஜார்க்கண்ட் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்திருப்பது காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications