'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச்சொல்லி இரவு முழுவதும் இளைஞருக்கு அடி உதை.. ஜார்க்கண்டில் கொடூர கொலை
Recommended Video
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட வந்ததாக கருதி இஸ்லாமிய இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி ஒரு கும்பல், கம்பத்தில் கட்டி வைத்து இரவு முழுவதும் அடித்து உதைத்ததால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர் அடித்துக் கொல்லப்படுவதை அங்கு சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜாரக்கண்ட் மாநிலம் ஹரிஷவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் டப்ரேஸ் என்ற 24 வயது இஸ்லாமிய இளைஞர்,
அந்த பகுதியில் உள்ள செரைகெலா என்ற ஊரில் கடந்த 18ம் தேதி இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருட வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஜெய் ஸ்ரீராம் சொல்லு
இதையடுத்து இளைஞர் ஷாம்ஸ் டப்ரேஸை பிடித்த அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். சுமார் 7 மணி நேரம் அந்த இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி அடித்து உதைத்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்து இளைஞரை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

தாமதமாக சிகிச்சை
இது தொடர்பாக உயிரிழந்த இளைஞர் ஷாம்ஸ் டப்ரேஸ் அன்சாரியின் உறவினர்கள் கூறுகையில், "டப்ரேஸை அடிப்பதை பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். டப்ரேஸ்க்கு முறையான சிகிக்சை அளிக்கவில்லை. படுகாயம் அடைந்த டப்ரேஸை சதார் மருத்துவமனையில் முதல் உதவி மட்டும் அளித்துவிட்டு ஜெயிலில் அடைத்தனர். அவனது நிலை மோசமான பின்னரே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சந்தேகப்பட்டு கொலை
டப்ரேஸை அன்று எதேச்சையாக செரைகெலாவைத் தாண்டி சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒரு இரு சக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. அதனால் தப்ரெஸ் மற்றும் அவனுடன் இருந்த இருவர் தான் காரணம் என அந்த ஊர் மக்கள் சந்தேகப்பட்டு அடித்துள்ளனர். ஒரு நாள் இரவு முழுவதும் அவனை அடித்துள்ளனர். காலையில் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். டப்ரேஸை காவல் நிலையத்தில் சென்று பார்க்க முயன்ற போது போலீசார் எங்களை பார்க்கவிடாமல் மிரட்டினார்கள். டப்ரேஸ் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு உறவினர்கள் கூறினார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications