ஜே.என்.யூ விவகாரம்: கேஜ்ரிவால், ராகுல் காந்தி மீதும் தேசத்துரோக வழக்கு பாய்ந்தது
ஹைதராபாத்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தேசவிரோத கோஷங்கள் எழுப்பியவர்களுக்கு ஆதரவு அளித்த குற்றத்திற்காக, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, ஆகியோர் மீது தெலங்கானா போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் தீவிரவாதி அப்சல் குருவின் நினைவு தினக் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவர் அமைப்பின் தலைவர் கன்யா குமார் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து வக்கீல் ஜனார்த்தன் கவுட் என்பவர், ஹைதராபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் மீது டெல்லி போலீசார் தேசத்துரோக வழக்கு போட்டிருப்பது தெரிந்தும், ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஐக்கிய ஜனதாதள செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி, காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்றனர்.
தெரிந்தே தேசத்துரோக குற்றச்சாட்டுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆகவே, இதுவும் தேசத்துரோகம்தான். தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்தும், ஆதரவு என்ற பெயரில் தேச விரோதிகளை ஊக்குவிப்பவர்கள் குறித்தும் கேள்வி எழுப்ப மனுதாரரான எனக்கு எல்லா உரிமையும் உள்ளது. இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ராகுல் காந்தி உள்பட 9 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அடுத்தகட்ட விசாரணையை 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதையடுத்து சரூர்நகர் காவல் நிலையத்தில் மேற்கண்டவர்கள் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications