பணிக்கு செல்லும் பெண்கள் விகிதாச்சாரத்தில், சோமாலியாவை விட இந்தியா மோசம்!
டெல்லி: வறுமையின் பிடியில் சிக்கிய, பின்தங்கிய நாடான, சோமாலியாவைவிடவும், இந்தியாவில்தான் வேலைக்கு செல்லும் பெண்கள் சதவீதம் குறைவாக இருப்பதாக கூறுகிறது புள்ளி விவரம்.
2011ம் ஆண்டு புல்ளி விவரப்படி பணி பங்கேற்பு விகிதாச்சாரம், இந்தியாவில், 25.5 சதவீதமாக இருந்தது. அதில், கிராமப்புறங்களின் பங்களிப்பு 30 சதவீதமாகும், நகர்ப்புறங்களின் பங்களிப்பு 15.4 சதவீதமாகவும் இருந்தது.

பல காரணங்கள்
பெண்கள் குறைந்த அளவில் பணியாற்ற பொருளாதார நிபுணர்கள் பல காரணங்களை கூறுகின்றனர். மேல்படிப்புக்காக வேலையை தியாகம் செய்வது, குழந்தை வளர்ப்பு, குடும்ப நெருக்கடி போன்றவை அவற்றில் முக்கியமானவை.

நகர்ப்புறத்தில் முன்னேற்றம்
1999-2000 முதல் 2011-12க்கு இடைப்பட்ட காலத்தில், கிராமப்புறங்களில், 5 சதவீதம் அளவுக்கு பணியாற்றும் பெண்கள் சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் அது 20 சதவீதம் என்ற நிலையில் தொடருகிறது. ஆனால், பெண்கள் எண்ணிக்கை அடிப்படையில் இது 19 மில்லியனில் இருந்து 29 மில்லியனாக அதிகரித்துள்ளது.

நகர்மயமாதல்
பொருளாதார நிபுணர் ஆப்ரஹாம் இதுகுறித்து கூறுகையில், "இக்கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் பெண்கள் அதிக அளவுக்கு பணியாற்ற ஆரம்பித்துள்ளனர். இதற்கு நகர்ப்புறம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியே காரணம்" என்கிறார்.

கிராம பெண்கள்
கிராமப்புறங்களில் பணியாற்றும் பெண்களில் 80 விழுக்காட்டினர், விவசாய வேலைகளில்தான் ஈடுபடுகின்றனர். உற்பத்தி துறையில், 7.5 சதவீதம் பேரும், கட்டுமான துறையில், 5.2 சதவீதம் பேரும், சேவைகள் துறையில் 7 சதவீதம் பேரும் பணியாற்றுகின்றனர். இதில் பல துறைகள், குறைந்த வருவாய் ஈட்டுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புறங்களில் இப்படி..
நகர்ப்புறங்களில், வேலைக்கு செல்லும், 39 சதவீதம் பெண்கள் 'பிற சேவைகள்' துறையின்கீழ் வருகிறார்கள். இதில், வீட்டு வேலைகளும் அடங்கும். அடுத்தபடியாக 27 சதவீதத்துடன் உற்பத்தி துறையினர் உள்ளனர்.

சேவை துறையிலுமா..
நகர்ப்புறங்களிலும் பெண்கள் மைனாரிட்டியாகவே உள்ளனர். கால்சென்டர், கல்வித்துறை போன்ற சேவை துறைகளில், பெண்கள் அதிகம் பணியாற்றுவதை போல தெரிந்தாலும், அதிலும் ஆண்கள்தான் அவர்களைவிட அதிகமாக பணியாற்றுகிறார்களாம். இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் துறைகளில் நிலைமை இன்னும் மோசம். அதில் முறையே, 16 சதவீதம் மற்றும் 18 சதவீதம் அளவுக்கு மட்டுமே பெண்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்தியாவில் மோசம்
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளிலேயே, இந்தியாவில்தான் பெண்கள் வேலைக்கு செல்வது மிக குறைவாக உள்ளது. பக்ரைன், மலேசியா, அவ்வளவு ஏன் பின்தங்கிய சோமாலியாவில் கூட இந்தியாவை விட அதிகம் பெண்கள் பணியாற்றுகின்றனர். இது எண்ணிக்கை சார்ந்தது கிடையாது. எண்ணிக்கை அடிப்படையில் என்றால், மக்கள்தொகையில் பெருத்த இந்தியா, அதில் முந்திவிடும். ஆனால் ஆணுக்கு நிகரான பெண்களின் விகிதாச்சாரமே இதுவாகும். சோமாலியாவில் 37 சதவீதம் பெண்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications