கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்! எனக்கு 4 மாசம் டைம் கொடுங்க.. இறங்கி வந்து பேசிய மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி ஜூனியர் டாக்டர்களின் போராட்டம் 15 வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில் ஜுனியர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த மாதம் முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிர சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினர். மூன்று வாரங்களை கடந்து போராட்டம் தொடர்ந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தா மற்றும் மேற்குவங்கத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவைகள் பாதிப்படைந்ததால் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது.
மேலும் மேலும் மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் படி தேசிய பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டதை அடுத்து மருத்துவ பயிற்சி மாணவர்கள் பணிக்கு திரும்பினார். அதே நேரத்தில் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் ஜூனியர் பயிற்சி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று போராட்டம் 15வது நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய அவர்,” எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்குமே உரிமை இருக்கிறது. ஆனால் சுகாதார சேவைகள் பாதிக்க கூடாது என்பதற்காக உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கேட்ட கோரிக்கைகளை பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும். சில கோரிக்கைகளுக்காக கொள்கை முடிவுகள் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் உங்கள் போராட்டத்திற்கு உங்கள் கோரிக்கைகளுக்கு நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம். ஆனால் இதைத்தான் செய்ய வேண்டும் என அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல" என கூறியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர் திங்கட்கிழமை நேரில் சந்திப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications