சிந்தியா செம ஃபாஸ்ட்.. பக்காவாக பிளான் போட்டு.. கச்சிதமாக செய்து முடித்து.. பாஜகவில் ஐக்கியமானார்!
போபால்: மத்திய பிரதேசத்தில் முன்னாள் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று மதியம் பாஜகவில் இணைந்தார். நேற்றுதான் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 23 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

எங்கே இருக்கிறார்
இந்த 23 எம்எல்ஏக்களும் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் தங்கி உள்ளனர். நேற்றுதான் சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து இந்த புரட்சியை செய்தார். நேற்றுதான் இந்த திட்டத்தை சிந்தியா கச்சிதமாக செய்து முடித்தார் . இந்த நிலையில் இன்று சிந்தியா முக்கியமான திட்டம் ஒன்றை செயல்படுத்துவார் என்கிறார்கள். மத்திய பிரதேச அரசியலில் இன்று முக்கியமான நாளாக இருக்கும்.

போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் எல்லோரும் எதிர்பார்த்தது போல சிந்தியா இன்று மதியம் பாஜகவில் ஐக்கியமானார். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே சிந்தியா மொத்தமாக காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பை இழந்துவிட்டார். அவர்களுடன் பேசுவது இல்லை. தற்போது சிந்தியா வீட்டிற்கு பாஜகவினர் காவலில் இருக்கிறார்கள். டெல்லியில் அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக
இன்று மொத்தமாக தனது ஆதரவு எம்எல்ஏக்களோடு சேர்ந்து பாஜகவில் இணைய சிந்தியா திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் சிந்தியா மட்டுமே இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். 23 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது. இவர்களின் ராஜினாமாவை இன்னும் சபாநாயகர் ஏற்கவில்லை என்றாலும் கூட , கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கண்டிப்பாக இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ஆட்சி கண்டிப்பாக கவிழும்.

எங்கே இருக்கிறார்கள்
இந்த 23 எம்எல்ஏக்களும் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 அமைச்சர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை கர்நாடக பாஜக கட்சி காத்து வருவதாக. இவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காது, ஆட்சி கவிழ்வது உறுதி என்றும் கூறுகிறார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications