ஜார்க்கண்டின் கண்டே தொகுதியில் அபாரம்! கல்பனா சோரனுக்கு காத்திருக்கிறதா பம்பர் பரிசு?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கணவர் ஹேமந்த் சோரனுக்கு அரசியலில் உருதுணையாக இருந்து வரும் அவருடைய மனைவியும் சிபு சோரனின் மருமகளுமான கல்பனா சோரன் , நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கண்டே தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் மற்றும் கடைசி கட்டமாக 38 தொகுதிகளுக்கும் கடந்த நவ.20 சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 67.74 சதவீதம் ஆகும். இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளராக கருதப்படுபவர் கல்பனா சோரன். இவர் ஹேமந்த்தின் மனைவி.
கண்டே தொகுதியில் கல்பனா போட்டியிடுகிறார். இவரது குடும்பம் அரசியல் பின்னணியை சேர்ந்தவர் அல்ல. ஹேமந்த் சோரன் சிறைக்கு செல்லும் போதுதான் கல்பனா அரசியலுக்குள் வந்தார். இவர் ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை தொழிலதிபர், தாய் இல்லத்தரசி. இவர் எம்பிஏ பட்டதாரி. கடந்த 2006 ஆம் ஆண்டு ஹேமந்த் சோரனை கல்பனா மணந்தார். இவர்களுக்கு நிகில், அன்ஷ் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
ஹேமந்த் சிறைக்கு சென்ற போது 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கூட கல்பனா தலைமையிலான ஜேஎம்எம் கட்சி இந்தியா கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது. லோக்சபா தேர்தலில் கூட கூட்டணி பேச்சுவார்த்தைகளை எல்லாம் இந்தியா கூட்டணியுடன் நடத்தியது கல்பனா சோரன்தான். இந்த நிலையில் கண்டே தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்ற கல்பனா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் முனியா தேவி போட்டியிட்டார். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் கல்பனா ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் 15ஆவது சுற்றுக்கு மேல் முனியா தேவியை கல்பனா முந்தியுள்ளார்.
21ஆவது மற்றும் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் கல்பனா சோரன் 119372 வாக்குகளையும் மு னியா தேவி 102230 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கல்பனா 17142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு 3047 பேர் வாக்களித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications