கலைஞர் டிவி நிர்வாகத்தில் எந்த பங்கும் எனக்கு இல்லை: கனிமொழி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் வாக்குமூலத்தை அளித்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகத்தில் தமக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடியை ஸ்வான் நிறுவனம் கொடுத்தது என்பது சிபிஐ வழக்கு.

இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி நேற்று வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூல விவரம்:
கலைஞர் டிவியில் குறுகிய காலம்தான் இயக்குநராக இருந்தேன். 2007ஆம் ஆண்டு நான் கலைஞர் டிவி இயக்குநர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் எந்த வகையிலும் அதன் நிர்வாக செயல்பாடுகளில் தொடர்பு கொண்டிருக்கவில்லை.
தற்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பண பரிவர்த்தனையானது 2008 மற்றும் 2011ஆம் ஆண்டுகாலத்தில் நடைபெற்றது. அந்த காலத்தில் கலைஞர் டிவியின் நிர்வாகத்தில் எனக்கு எந்த ஒரு பங்குமே இல்லை. இது முழுவதும் கலைஞர் டிவி நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்பட்ட பணபரிவர்த்தனை.
இவ்வாறு கனிமொழி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
'பென் டிரைவ்' வாக்குமூலம்
டெல்லி நீதிமன்றத்தில் நேற்று காலையிலேயே கனிமொழி ஆஜராகிவிட்டார். அவர் தமது வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாக ஒரு 'பென் டிரைவ்'வில் எடுத்து வந்து நீதிபதியிடம் கொடுத்தார்.
அதில் இருந்தவற்றை அங்கிருந்த ஊழியர்கள் பிரிண்ட் எடுத்தனர். பின் அந்த பதில்கள் அடங்கிய அத்தனை பக்கங்களிலும் கனிமொழியிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதனால் ராஜாவைப் போல கூண்டில் நின்று வாய்மொழியாக மற்றும் எழுத்துப் பூர்வமாக கனிமொழி வாக்குமூலம் அளிக்கவில்லை.
இருப்பினும் ஆ. ராசாவைப் போலவே 90% கேள்விகளுக்கு 'தெரியாது என்றே கனிமொழியும் பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் சரத்குமார் ரெட்டியும் தன் வாக்குமூல பதில்களை பென் டிரைவ்'வில் எடுத்து வந்திருந்தார். அவரிடமும் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து பெறப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications