Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்கவே விடமாட்டோம்- கன்னட விவசாயிகள் ஆற்றில் குதித்து போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரைத்திருப்பது கர்நாடகாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க விடமாட்டோம் என ஆற்றில் குதித்து கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடகா அரசு வெறும் 3,000 கன அடி , 4,000 கன அடி நீரைத்தான் திறந்துவிட்டது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீரை கேட்ட நிலையில் இந்த சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்த சொற்ப நீர் திறப்பையும் நேற்றே கர்நாடகா நிறுத்திவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகா பாஜக மற்றும் கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Kannada farmers holds protest against release of Cauvery water to Tamil Nadu

தமிழ்நாடு அரசோ, உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்துக்கு போயுள்ளது. இவ்வழக்கில் கர்நாடகா அரசும் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மனு மீது செப்டம்பர் 21-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்து காவிரி ஒழுங்காற்று குழு நேற்று பரிந்துரைத்தது. இந்த தகவல் வெளியான உடனேயே கர்நாடகாவின் மாண்டியா விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். ஶ்ரீரங்கப்பட்டணத்தில் காவிரி ஆற்றில் குதித்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+